மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பிப்பு காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.அதன்படி, வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்குவது எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.இதன்படி, எதிர்வரும் மாதம் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை அபராதம் செலுத்தாமல் மீண்டும் பெறலாம்.இதற்கிடையில், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஒன்லைன் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவது, செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.