மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த ஆண்டில் 42. 6 சதவீதமாக இருந்தது. வடமேற்கு மாகாணம் 11. 1 சதவீத பங்களிப்பையும் மத்திய மாகாணம் 10. 1 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளன.