தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தும் மாவீரர் நாள் இன்றாகும்.
அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.