ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் விபத்தில் சிக்கிய படுகாயமடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான பவுலர் ஷேன் வார்ன் (shane-warne) மகன் ஜேக்சனுடன் (Jackson warne) கடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை 28-ம் திகதியில் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தின் போது இருவரும் 15 மீட்டர் தூரம் வரையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக வெளிக்காயம் ஏதும் ஏற்படாததால், மருத்துவமனைக்கு செல்லாமல் வீடு திரும்பி இருக்கின்றனர்.
ஆனால், தற்போது உடல் வலி இருந்த காரணத்தினால் உடனே மருத்துவமனையை நாடியுள்ளனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.