விலை குறைப்பு தொடர்பான மருந்துகளின் பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாக, சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.