ஸ்கொட்லாந்து பொலிஸார், இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதனை நிறுத்திக் கொண்டதாக வெளியான தகவல்கள் பொய் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து வழங்கி வந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி இடைநிறுத்தம் குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸார் இதுவரையில் ஸ்கொட்லாந்து அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பயிற்சி வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தாலும் அது மனித உரிமை விவகாரங்களினால் ஏற்பட்டிருக்காது எனவும் அது கோவிட் நிலைமைகளினால் இவ்வாறு பயிற்சி வழங்குவது இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.