ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கான விலைமனுக்கள் கோரப்படும் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்களை சர்வதேச நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம் என்றும், இந்த செயல்முறை நடவடிக்கைகளின் முடிவில் நிறுவனம் ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.