ஹக்மன, தெனகம பிரதேசத்தில் 34 ஹெரோயின் பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் தெய்யந்தரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாரின் பிடியில் இருந்த நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.அதன்படி, பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யத் தயார்படுத்தப்பட்ட சுமார் 3.15 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்,ஏனைய சந்தேக நபர்கள் 3.9 கிராம் ஹெரோயின் வைத்திருந்தனர். அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 38 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.இவர்கள் தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.குறித்த குழுவினர் இன்று தெய்யந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.