வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம்
சமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு…
பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கு இடமில்லை: வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது – பொதுஜன பெரமுன
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பயாகலை…
பெற்றோருக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா…
ராகம பெண் படுகொலை – சந்தேகநபர் கைது!
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவத்தை தேவாலயத்திற்கு அருகில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (28) கைது செய்துள்ளனர். சேதபொல, மாமிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
மீண்டும் ஜனாதிபதியாக நான் தயார்!
மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ரிவி தெரண” வில் ஒளிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற ஒரே ஜனாதிபதி தாம்…
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!
அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…
சரக்கு ஏற்றுமதி ஒரு பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது
நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் அளவைத் தாண்டியுள்ளதாக சமீபத்திய தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜூலை மாதத்தில் இலங்கை வர்த்தகப்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை இணைத்து உரிய சட்டத்தை திருத்தியமைக்க வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் நேற்று (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை…
பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடல்
அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று…