44 % சதவீதமான மக்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நேற்று (16) யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் நீர்வளத்துறை சர்பாக பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன அது தொடர்பாக வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இரணைமடு தொடர்பில் நிறைய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்று தருவதற்கும் கட்டாயம் ஒரு தீர்வினை வழங்கப்படும்.
எங்களின் திட்டத்தின் படி கட்டாயமாக 44 % சதவீதமான மக்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும் என தெரிவித்தார்.