மட்டக்களப்பு – திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
தேனிர் வைப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் எரிவாயு அடுப்பினை பற்றவைத்த பின்னரே, வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்.
எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கும் சுவிஸ் கிராம கிராம சேவகர் அலுவலர்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.