நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக் காரணம் டொலர் பற்றாக்குறை என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டொலர் பற்றாக்குறை காரணமாக பியுடோன் அளவை குறைத்துள்ளமையால் வீடுகளில் எரிவாயு தீ மூளும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு காரணமாக பியுடோனை குறைத்திருப்பார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர் பியுட்டோனை அளவைக் குறைத்து உரிய சோதனைகளை மேற்கொள்ளாமல் சந்தைக்கு அனுப்பியமையானது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.