இந்தியா தமிழகத்தில் கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக, இந்திய மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 128 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்புக்கள் அதிகம் பதிவாகும் குறித்த மாவட்டங்களில், கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மருத்துவத்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகமெங்கும் இரண்டாம் கட்டமாகத் தடுப்பூசி ஏற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.